நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை…

நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறையினர் நடிகர் விஜயை விசாரிக்க அழைத்து சென்றனர். அதனால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டது. படத்தில் அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு ஓரளவு முடிவடைந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நெய்வேலியில், ஓ.என்.ஜிசி நிறுவனத்தில் சுரங்க பாதையில் நடைபெற்று வந்தது. விஜய்-விஜய்சேதுபதியின் சண்டை காட்சி படமாக்கப்பட்ட நிலையில், தீடிரென்று படப்பிடிப்பு தலத்தில் வருமான வரித்துறையினர் விசாரிக்க விஜயை அழைத்து சென்றதால், படப்பிடிப்பு தாற்காலிகமாக நிறுத்திவைக்கட்டுள்ளது.

நடிகர் விஜய் வீட்டில்  வருமான வரித்துறையினர் சோதனை...

இதற்க்கு முன்னாள், விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த நிறுவனமான, ஏ.ஜி .எஸ் நிறுவனத்தின் சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது. அதனை தொடர்ந்து , தற்போது நடிகர் விஜயிடம் விசாரணை நடந்து வருகிறது.


You may also like...

Leave a Reply