வலிமை படத்தின் ரிலீஸ் தேதி உறுதி.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!!!

தல அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகி உள்ளது. தீபாவளிக்கு முன்பே வெளிவர உள்ளது என்பது கூடுதல் ஆச்சிரியம் …!!!

வலிமை  படத்தின் ரிலீஸ் தேதி உறுதி.. ரசிகர்கள்  கொண்டாட்டம்..!!!

தல அஜித்தின் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் தான் வலிமை. இப்படத்தின் ஷூட்டிங் அதிகபட்சம் முடிவடைந்த நிலையில் படத்தின் 30% ஷூட்டிங் ஸ்பெயின் நாட்டில் நடைபெற உள்ளது. அதற்காக படக்குழு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளது. விரைவில் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விடும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. வலிமை படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை போன்ற விடுமுறை நாட்களில் தல படம் வெளிவரும் என செய்தி வந்துள்ளது. தற்போது அதற்கான வேலைகள் தான் விரைந்து நடை ப்பெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் வலிமை படத்தின் டீஸர் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி தல ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது


You may also like...

Leave a Reply