இளைஞர் கழுத்து எலும்பு முறிந்து உயிரிழப்பு – டிக் டாக் ஆல் வந்த விபரீதம்

Tic Tac video இளைஞர் கழுத்து எலும்பு முறிந்து உயிரிழப்பு – டிக் டாக் ஆல் வந்த விபரீதம்

இளைஞர்கள், கல்லூரி மாணவியர்கள் மற்றும் திருமணமான ஆண்கள், பெண்கள் அனைவரும் டிக் டாக் செயலியில் மூழ்கி, தங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்று தங்களது தனித்திறமையை வீடியோவாக டிக் டாக்ல் பதிவேற்றம் செய்து அனைவர்க்கும் பகிர்கின்றனர்.

ஆரம்பத்தில் ஆடல் பாடல்களில் தான் அதிகம் ஆர்வம் காட்டும் மக்கள் தற்போது, தங்கள் தனித்திறமை என்னென்ன இருக்கிறதோ அனைத்தையும் வெளிக்காண்பிக்க ஆரம்பித்தனர் அதன் விளைவாக, கர்நாடக மாநிலத்தில் சிக்கநாயகம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பின்னோக்கி பல்டியடிப்பதை டிக் டாக்கில் விடியோவாக பதிவேற்றம் செய்ய துணிந்தார், ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் சரியான கோணத்தில் விழாததால், அவரின் கழுத்து எலும்பு முறிந்து பெரும் ஆபத்துக்குள்ளனர். அதன் பிறகு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தங்களுக்கு எது வருமோ அதை செய்யுங்கள், விடீயோவிற்காக தேவையில்லாத விஷயத்தில் தலையிடவேண்டாம். அப்படி செய்தல் இதுதான் நடக்கும் என்பது இந்த இளைஞரின் செயலால் புரிகிறது.


You may also like...

Leave a Reply