சளி, இரும்பல் விரட்டும் அற்புத தூதுவளை ரசம் …!!!

  சளி, இரும்பல் விரட்டும் அற்புத தூதுவளை ரசம் …

சளி, இரும்பல் போக்கக்கூடிய அற்புத மூலிகைகளில் ஒன்று தூதுவளை. தற்போது உள்ள சூழ்நிலையில்,கொரானாவிலிருந்து விடுபட நாம் பல பாரம்பரிய உணவு வகைகளை சேர்த்து வருகிறோம். இந்த ரசத்தை நாம் அடிக்கடி வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

சளி, இரும்பல் விரட்டும் அற்புத  தூதுவளை  ரசம் ...!!!

மருத்துவ குணம் நிறைந்த தூதுவளையில்,ரசம் எப்படி வைப்பது? என்று பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:-

1-தூதுவளை-1கைப்பிடி அளவு

2- புளி -ஒரு எழுப்பிச்சை அளவு, தக்காளி – 2
3- மிளகு- 1 தேக்கரண்டி
4-சீரகம் – 3 தேக்கரண்டி
5- வெள்ளைப்பூண்டு -7 பல்
6- பெருங்காய தூள்- தேவைக்கேற்ப
7- தாளிக்க- கடுகு,உளுந்தப்பருப்பு , கருவேப்பிலை
8- பச்சைபிளகாய்-5, பட்டவத்தல்-2
9- சின்ன வெங்காயம்- சிறுது

செய்முறை:-

தூதுவளை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். புளியை சுடுநீரில் ஊறவைத்துக் கொள்ளவும். மிக்ச்சியில் தூதுவளை போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்பு, மிக்ச்சியில் மிளகு,சீரகம், வெள்ளைப்பூண்டு, கருவேப்பிலை மற்றும் பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். இதனுடன் தக்காளி போட்டு அரைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து எடுத்துக்கொண்டு, காடயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தப்பருப்பு , பட்டவத்தல் மற்றும் பெருங்கயாதூள் சேர்த்து தாளிக்கவும். பின்பு அதனுடன், அரைத்த விழுது அனைத்தையும் சேர்ந்து நன்கு வதக்கவும். அதனுடன், புளிக்கரைசல் ஊற்றி, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறுது மஞ்சத்தூள் சேர்க்கவும். பின்பு, கொதி வருவதற்குள் இறக்கி கொத்தமல்லி போட்டு இறக்கி விடலாம். இந்த ரசம் சளி, இரும்பல் இவற்றிக்கு சிறந்த மருந்து.


Leave a Reply