பாலிவுட்டில் தல அஜித் – தமிழ் ரசிகர்களை மறந்து விடுவாரா
வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’. படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தை அடுத்து மீண்டும் இதே கூட்டணி இணையவுள்ளது.
ஆனால் இதே கூட்டணி 3வது முறையாக இணையவுள்ளதாகவும் செய்திகள் வந்தன.
ஆனால், அதை தயாரிப்பாளர் போனி கபூர் மறுத்துள்ளார்.
“’நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு ஒரு ஆக்ஷன் படம் தயாரிக்க உள்ளோம். ஒரு ஹிந்திப் படத்தில் நடிப்பதற்காக அவரிடம் கேட்டுள்ளோம், ஆனால், அவர் இன்னும் சம்மதிக்கவில்லை,” என தெரிவித்துள்ளார்.
ஆனால் அஜித் எப்போது சம்மதிப்பார்? என்பது அவருக்கே வெளிச்சம்.
