பிரபல பாடகர் எஸ்.பி .பி அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தந்த அறிக்கை!!
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன்னுடைய காந்த குரலில் பல ரசிகர்களை கவர்ந்தவர். அவர் பாடிய பாடல்கள் கணக்கில் அடங்காதவை. அவர் பாடல்கள் அனைத்தும் இன்றளவும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அனைவரும் விரும்பி கேட்கும் பாடல்கள் எஸ்.பி.பி அவருடைய பாடல்கள் தான். இப்படி அவரை பற்றி பேசி கொண்டே போகலாம்.
இனிமையான பாடல்களால் மக்களை கவர்ந்த எஸ்.பி.பி அவர்களுக்கு கடந்த 5 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர்க்கு தொடர்ந்து சிகிச்சை அழைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக அவருடைய உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது என்றும், அவருக்கு செயற்கை சுவாச கருவியானா எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளித்துவருவதாக மருத்துவமனை தெரிவித்து வந்தது. இதனால் தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் எஸ்.பி.பி அவரின் ரசிகர்கள் மிகுந்த சோகத்துடன் உள்ளனர். எஸ்.பி.பி அவர்கள் மீண்டு வர பல இடங்களில் பலரும் பிராத்தனை செய்து வந்தனர். அவருடைய பாடல்களை பாடி பிராத்தனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது, மருத்துவமனை அளித்துள்ள ஒரு அறிக்கை ரசிகர்கள் மத்தியில் சற்று ஆறுதல் அளித்துள்ளது. அதாவது, பாடகர் எஸ்.பி.பி அவர்கள் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், அவருக்கு எக்மோ மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அவருடைய உடல்நிலை குறித்து அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தெரிவித்து உள்ளது. அவர் விரைவில் குணமடைந்து, மீண்டு வர நாம் அனைவரும் பிராத்தனை செய்வோம்…….