இப்படி ஒரு ஆச்சிரியமான கோவிலை நீங்கள் பார்த்ததுண்டா…?

இப்படி ஒரு ஆச்சிரியமான கோவிலை நீங்கள் பார்த்ததுண்டா…?

 

             ஆந்திர மாநிலம் விஜயநகரம் என்ற மாவட்டத்தில் ஸ்ரீ ராம நாரணயனம் என்னும் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பல மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தந்து வருகின்றனர்.அப்படி என்ன சிறப்பு எனறால், இக்கோவில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில், மிக பிரம்மாண்டமான முறையில் வில் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வில்லிருந்து அம்பு புறப்பட தயாராக உள்ளது போலவே இருக்கும்.

இப்படி ஒரு ஆச்சிரியமான கோவிலை நீங்கள் பார்த்ததுண்டா...?

இக்கோவிலின் நுழைவு வாயில் அம்பின் அடிப்பகுதியில் தான் உள்ளது. நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால் நேராக ஒரு பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் அம்புவின் நுனி பகுதியில் நமக்கு காட்சியளிக்கிறார். அதற்கு அடுத்தாற் போல், சயன கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். சுற்றி வரும் பகுதியில் அனைத்திலும், ராமாயணத்தை நமக்கு நினைவு படுத்தும் வண்ணமாக சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

இப்படி ஒரு ஆச்சிரியமான கோவிலை நீங்கள் பார்த்ததுண்டா...?

மேலும், இக்கோவிலில் சீதாலட்சுமி, ராமர் மற்றும் லக்ஷ்மணன் காட்சியளிக்கின்றனர். அவர்களுக்கு தினமும் பூஜை நடைபெறும். அம்பின் இரு பகுதியிலும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் இந்தியாவிலேயே மிக பிரமாண்டமாக வித்தியாசமாக அமைக்கட்டுள்ளது..

இப்படி ஒரு ஆச்சிரியமான கோவிலை நீங்கள் பார்த்ததுண்டா...?

இக்கோவில் விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  மேலும் இக்கோவில் மிக பெரிய சுற்றுல்லா தளமாக அமைந்துள்ளது .


You may also like...

Leave a Reply