70 கோடி அப்பு !!!! எட்டே நிமிடக் காட்சிக்கு 70 கோடி அப்பு!!!
இந்திய சினிமா துறையில் முதல் முறையாக ஹாலிவுட் படத்திற்கு இணையாக கோடிக்கணக்கான செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் தான் “சாஹா”. இப்படத்தில் பாகுபலி ஹீரோ “பிரபாஸ்” நடித்துள்ளார். மேலும், “ஸ்ரத்தா கபூர்”, “அருண்விஜய்” மற்றும் “நீல்நிதின் முகேஷ்” ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். UV creation தயாரிப்பில் சுஜீத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சண்டை காட்சிகள் படமாக்கி வருகின்றனர்.
தற்போது, சாஹா படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் அக்காட்சி உருவான விதம், செலவு பற்றி படக்குழுவினர் தெரிவித்தனர். அடேங்கப்பா !!! ஒரு 8 நிமிட சண்டைக் காட்சிக்கு 70 கோடியா??? என்கின்ற அளவுக்கு ஆச்சிரியம் தான்…
ஹாலிவுட் படத்தில் மட்டுமே இது சாத்தியம் என்கின்ற நிலைமையை தற்போது இந்திய சினிமா துறை மாற்றி உள்ளது. இப்படத்தில் வரும் சண்டைக் காட்சிக்கு ஹாலிவுட் தொழிநுட்பம் மற்றும் ஸ்டன்ட் துறையை சேர்ந்த கலைஞர்களை பயன்படுத்திள்ளனராம்…இப்படம் தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடிய விரைவில் ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை நாம் பார்க்கலாம்…………