நன்றாக தெரிந்த வளைய சூரியகிரகணம் காட்சி

Ring of fire நன்றாக தெரிந்த வலய சூரியகிரகணம் காட்சி

Ring Of Fire என்றழைக்கப்படும் வளைய சூரியகிரகணம் – வானில் அவ்வப்போது சில அதிசயங்கள் நிகழ்கின்றன, அதில் இன்று நடைபெற்ற வளைய சூரியகிரகணம் முக்கியமாக கருதப்படுகிறது. சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து அதன் விளிம்பில் தோன்றும் பிம்பம் வளைய சூரியன் என்று கூறப்படுகிறது. இந்த சூரியகாரணத்தை அனைவரும் ஆவலுடன் பார்த்து வந்தனர்.

சோலார் பில்டர் கண்ணாடிகளை கொண்டு மிகவும் தெளிவாக அனைவரும் பார்த்து மகிழ்ந்தனர் மேலும் சிலர் ஜோதிட சாஸ்திரத்தில் கூறியதுபோல் கிரணத்திற்க்கு முன்னரே தங்கள் காலை உணவுகளை உட்கொண்டு, கிரகணம் முடிந்ததும் உப்பு நீரில் நீராடி தோஷங்களை களித்தனர். இவ்வாறு செய்தால் கிரகணத்தினால் ஏற்படும் கதிவீசிடமிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் என்பது ஐதீகம்.

பல இடங்களில் சோலார் பில்ட்டர் கண்ணாடிகள் மிகவும் குறைந்த விலையில் விற்று வந்தனர், அதனை மக்கள் வாங்கி கிரகணத்தை பார்த்து வியந்தனர். மேலும் இது கங்கண சூரியகிரகணம் என்றும் அழைக்கப்பெறுகின்றன. அதாவது, மோதிரம் போல் அல்லது நெருப்பு வளையம் போல் தோற்றமளிக்கும். இது அரிதாகவே நிகழும் சூரியகிரகணமாகும். ஜோதிட சாஸ்திரப்படி நாளை கேது என்னும் பாம்பு சூரியனை விழுங்கும் நிகழ்வு என்பதால் இதற்கு கேது கிரகஸ்த சூரியகிரகணம் என்று கூறப்படுகிறது.


Leave a Reply