மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் – ரஜினி கட்சி துவக்கம்

மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் – ரஜினி கட்சி துவக்கம்

ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.
#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல

அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் தற்போது தனது தகவலை தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி மூன்று வருடங்கள் கழித்து தற்போது கட்சி தொடங்குவது பற்றிய உறுதியான தகவலை தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமையன்று தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தற்போது இந்த உறுதியான தகவலை தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் மிகுந்த வேண்டுகோளுக்கிணங்க ரஜினி தற்போது தனது அரசியல் கட்சி பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்றும் அதற்கான தேதி டிசம்பர் 31ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் தற்போது தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கண்டிப்பாக ஓட்டு பிரியும் என்பதில் மாற்றம் இல்லை. முன்னதாக அதிமுக-பாஜக தங்கள் கூட்டணி குறித்து உறுதியான தகவல் வெளியான பின்பு ரஜினி தனது தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் இவர் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது தெரிகிறது. மேலும் கமலுடன் கூட்டணி அமைப்பாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

கருணாநிதி, ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெருகி வருகிறது இதுவும் ஒரு நல்ல விஷயம்தான். அப்போது தான் எதிர்த்து கேள்வி கேட்பதற்க்கு ஆட்கள் பெருகிவிடும் இதனால் ஊழல் குறையவும் வாய்ப்புள்ளது என்பது எங்களின் நம்பிக்கை. எப்படியோ ஒருவழியா ரஜினி தனது தனிவழியை தேர்ந்தெடுத்து விட்டார். அவரின் நல்ல நோக்கங்கள் வெற்றிகரமாக நிறைவேற எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் - ரஜினி கட்சி துவக்கம்

rajini-politics


You may also like...

Leave a Reply