ஒத்த செருப்பு வெற்றிக்கு பிறகு வித்தியாசமான முயற்சியுடன் அடுத்த படம்-பார்த்திபன் அறிவிப்பு!!!
பார்த்திபன் எப்போவுமே ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் மற்றும் கதாபாத்திரத்துடன் படம் இயக்குவதில் வல்லவர். அந்த வகையில் கடைசியாக வெளியான “ஒத்த செருப்பு” திரைப்படம் பலரது பாராட்டுகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் அடுத்து இயக்க இருக்கும் படம் இரவின் நிழல். இப்படம் முழுவதுமே ஒரே ஷாட்டில் இயக்குனர் பார்த்திபன் இயக்க போவதாக தெரிவித்துள்ளார்.

இது போல ஒரு சில படங்கள் மட்டுமே, இதுவரை எடுக்கப்பட்டுள்ளது. அதிலும், தமிழ் திரையுலகில் ஒரே ஷாட்டில் படம் இயக்கியது இல்லை. இப்படம் தான் முதல் சான்றாக அமைய உள்ளது என்று சொன்னால் அது மிகையாது…