பாண்டியன் ஸ்டார் நடிகை சித்ரா திடீர் மரணம்.. கொலையா? தற்கொலையா?

பாண்டியன் ஸ்டார் நடிகை சித்ரா திடீர் மரணம்.. கொலையா? தற்கொலையா?

சின்ன திரையில் ரொம்ப பிரபலமான நடிகை சித்ரா. அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டார் நாடகத்தில் கதிர் ஜோடியா முல்லை என்ற காதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் திடீரென இன்று காலை ஒரு விடுதியில் சடலமாக
மீட்கப்பட்டுளார்.

பாண்டியன் ஸ்டார் நடிகை சித்ரா திடீர் மரணம்.. கொலையா? தற்கொலையா?

pandiyan store mullai died

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரொம்ப பிரபலமான சீரியலில் நடிப்பவர் சித்ரா. முல்லை என்றால் தான் அனைவருக்கும் நினைவு வரும். அந்த சீரியலில் முல்லை என்ற காதாபாத்திரத்தில் தான் கதிர்-க்கு ஜோடியாக நடித்து வந்தார். அவர்க்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த அளவுக்கு நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் என்றே சொல்லலாம். அவர் இயல்பாகவே ரொம்ப ஜாலியான charcter தான். சித்ரா ஷூட்டிங் இடத்திலும் தன்னை சுற்றி உள்ளவர்களுடன் நன்றாக பழகுவார் என்றும், சிரித்த முகத்துடன் தான் இருப்பர் என்றும் அனைவரும் கூறுகின்றனர். அப்படியிருக்கையில், திடீரென இன்று காலை அவர் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக செய்தி வெளிவந்தது.

பாண்டியன் ஸ்டார் நடிகை சித்ரா திடீர் மரணம்.. கொலையா? தற்கொலையா?

சித்ரா ஒரு விடுதியில் தன்னுடைய வருங்கால கணவருடன் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் சித்ராவுக்கு ஹேமந்த் என்பர்வுடன் நிச்சியதார்தம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும் வரும் ஜனவரியில் கல்யாணம் முடிவுச் செய்யப்பட்ட நிலையில், திடீரென சித்ராவின் மரணத்தால் அவரது குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது குடும்பத்தினர் சந்தேகப்படுகின்றனர். இதனால், அவருடன் விடுதியில் தங்கியிருந்த ஹேமந்த் என்பவரிடம் தான் போலீசார் விசாரித்து வருகின்றனர். சித்ராவின் சடலத்தில் கன்னத்திலும், கழுத்திலும் காயம் உள்ளது குறிப்பிடவேண்டிய விஷயம்.


You may also like...

Leave a Reply