ஒத்த செருப்பு சைஸ் 7 படம் எப்படி இருக்கு??

பார்த்திபன் நடிப்பில் இன்று வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 படம் வெளிவருவதற்கு முன்பே பலரின் பாராட்டுகளை பெற்ற படம். படத்தில் பார்த்திபன் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகங்களில் தன் திறமையை வெளிப்படுத்திஉள்ளார் . தமிழ் திரையுலகில் யாரும் முயற்சிக்காத புதிய பாதையில் எடுத்துள்ள ஒத்த செருப்பு படம் எப்படி இருக்கு என்று பார்ப்போம்…..

படத்தின் கதைக்கரு :-

படத்தில் பார்த்திபன் நடுத்தரகுடுமத்தை சார்த்தவர். அவருக்கு அழகான மனைவி மற்றும் ஒரு அழகான பையன். அவருடைய மகனுக்கு பிறக்கும் போதே எதோ பெரிய வியாதி உள்ளது. மரணத்தின் தருவாயில் இருக்கும் தன் மகனை காப்பாற்ற போராடுகிறார் பார்த்திபன். அதற்காக அவர் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்து வாட்ச்மேன் வேலை பார்க்கிறார். திடிரென்று, பார்த்திபனை ஒரு கொலை வழக்கில் கைது செய்கிறார்கள். போலீஸ் அவரை விசாரிக்கும் போது தான் அவர் ஒரு கொலை மட்டும் செய்யவில்லை என்றும் மேலும் இரண்டு கொலைகளை செய்துள்ளார் என்பது தெரிய வருகிறது. அவர் எதற்காக கொலை செய்கிறார்?? யாரை கொலை செய்கிறார்?? அவர் மனைவி மற்றும் மகனுக்கு என்ன நடந்தது?? என்பது தான் மீதி கதை.

ஒத்த செருப்பு  சைஸ் 7 படம் எப்படி இருக்கு??

இப்படத்தில், ஒரு சிறப்பு என்னவென்றால்? படம் முழுவதும் பார்த்திபன் மட்டுமே நாம் திரையில் பார்க்க முடியும். மற்ற கதாபாத்திரங்கள் எல்லாமே பின்னணியில் குரலாக வந்து நம் மனதில் நிறைகின்றனர். தமிழ் திரையுலகில் யாரும் எடுக்காத ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார் பார்த்திபன்.

திரைவிமர்சனம்:-

பார்த்திபன் பொதுவாக பேச்சில் அனைவரையும் ஈர்ப்பவர். ஒத்த செருப்பு படத்தில் அவர் ஒருவர் மட்டும் நடித்துள்ளார். எப்படி இரண்டு மணிநேரமும் பார்த்திபன் மட்டுமே திரையில் பார்க்க போகிறோம் என்ற சலிப்பு வேண்டாம். சலிப்பே வராதா அளவுக்கு ரொம்ப சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், ஒரு இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தன திறமையை வெளிப்படுத்தி உள்ளார். மற்ற கதாபாத்திரங்கள் திரையில் பார்க்கவில்லை என்றாலும், படத்தில் அவர்கள் இல்லை என்றே சொல்ல முடியாத அளவுக்கு, இயக்குனர் பார்த்திபன் திறமையாக செயல்பட்டுள்ளார். படத்தில் இசை சந்தோஷ் நாராயணன் நல்ல இருக்கு .பின்னணி இசை சத்யா அவரின் சவாலான முயற்சியால் படம் முழுக்க ஒரு விறுவிறுப்பை குறையாமல் உள்ளது. எடிட்டிங் சவாலான வேலை தான் இப்படத்திற்கு, அதுவம், இப்படத்தில் அருமை.ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பக்கபலமாக அமைந்துள்ளது என்றே சொன்னால் அது மிகையாகாது .

ஒத்த செருப்பு  சைஸ் 7 படம் எப்படி இருக்கு??

படம் முழுக்க ஒரே ஒரு அறை அந்த ஒரு அறையில் பார்த்திபன் மற்றுமே நாம் படம் முழுக்க பார்க்க போகிறோம் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான். பார்த்திபனின் மிக நீளமான வசனங்கள் கொஞ்சம் சலிப்பை ஏற்படுவது போல தெரிகிறது. படத்தில் பார்த்திபன் பேசுவதை எங்கயாவது கவனிக்கவில்லை என்றால் படம் புரிவது கொஞ்சம் கஷ்டம் தான்.

மொத்தத்தில் பார்த்திபன் ஒரு இயக்குனராகவும், தயாரிப்பாளரகவும் மற்றும் நடிகராவும் உண்மையில் அசத்தியுள்ளார் என்றே சொல்லலாம். இப்படி ஒரு துணிச்சலுடன் படத்தை எடுத்த பார்த்திபனுக்கு உண்மையில் பெரிய அளவில் பாராட்டுகளும் விருதுகளும் வரப் போகிறது என்றே சொல்லலாம்.

ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு சினிபுக்கின் ரேட்டிங் :- 3.5/5


You may also like...

Leave a Reply