சென்னையில் விடாது பெய்யும் கனமழை – செம்பரப்பாக்கம் நீர் திறப்பு ….!!
சென்னையில், தற்போது நிவர் புயல் காரணமாக தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், தற்போது செம்பரபாக்கம் ஏரியின் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், உபரி நீரின் அளவு 9000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், மக்கள் வீட்டை விட்டு வெளிய வர முடியமால் தவித்து வருகின்றனர். வெளி இடங்களில் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரம்பத்திருக்கு ஆளாகியுள்ளனர். காற்று சுமார் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசி வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு இதே போல ஒரு புயல் வீசியதில் சென்னை கதிகலங்கி போனது. வர்தா புயலின் தாக்கத்தை சென்னை மக்கள் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றது வர்தா புயல்.
மீண்டும் 5 வருடங்களுக்கு பிறகு, தற்போது வந்திருக்கும் நிவர் புயலும் பெரிய அளவில் தான் உள்ளது. இதனுடைய தாக்கம் சென்னையில் எந்த அளவுக்கு இருக்க போகிறது என்பது தெரியவில்லை.
இன்று இரவு தான் நிவர் புயல் கரையை கடக்கும் என்பதால் சென்னை மக்கள் பீதியில் உள்ளனர்.