இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – முதல் பார்வை
வேறுபட்ட, நிறைவான திரையனுபவம். தீவிரமான கருப்பொருள்களை கதையின் அடித்தளமாக கொண்டிருந்தாலும் கலை வடிவமாக அதியன் ஆதிரை வார்ப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். போர்-ஆயுத அரசியல், முதலாளித்துவத்தின் சுரண்டல், சாதிய வன்மம் என்று மூன்று புள்ளிகளை லாரி ஓட்டுநராக வரும் தினேஷ், ஒரு குண்டு ஆகியவற்றின் மூலம் கச்சிதமாக நெய்திருக்கிறார்...