மூக்குத்தி அம்மன் படத்தின் அப்டேட்- வைரலாகும் செய்தி:-

மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடியுள்ளார். அப்பாடலை பற்றி ரகுமான் டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.

நயன்தாரா நடிப்பில் நடிகர் ஆர்.கே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, படத்தை வெளியிடலாம் என்கின்ற நிலையில் கொரோனா காரணமாக படத்தை படக்குழுவினர் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. படக்குழுவினர் இப்படத்தை தீபாவளி அன்று விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டாரில் வெளியிட போவதாக தெரிவித்துள்ளனர்.

மூக்குத்தி அம்மன் படத்தின் அப்டேட்- வைரலாகும் செய்தி:-

இப்படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ளார். ஆடிக்குத்து என்ற பாடலை பாடகர் எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா பாடியுள்ளார். படக்குழுவினருடன் இணைந்து இப்பாடலை அம்மா எல்.ஆர்.ஈஸ்வரி உற்சாகமாக நடனமாடி பாடியுள்ளார். இதனை பற்றி ஆர்.கே பாலாஜி அவர்கள், இணையத்தில் ஈஸ்வரி அம்மா அவர்கள் 80 வயதிலும் இவ்வளவு எனெர்ஜியுடன் பாடியுள்ளார். அவர் இந்த பாடத்தில் பாடியது எங்கள் பாக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மூக்குத்தி அம்மன் படத்தின் அப்டேட்- வைரலாகும் செய்தி:-

 

மேலும், ஏ.ஆர். ரகுமான் அவர்கள், ஈஸ்வரி அம்மா பாடலை பற்றியும், ஈஸ்வரி அம்மாவை பற்றியும் பாராட்டி உள்ளார்.


You may also like...

Leave a Reply