வைரலாக பரவும் அனிருத் போடும் மாஸ்டர் தாளம்

வைரலாக பரவும் அனிருத் போடும் மாஸ்டர் தாளம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜயும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் மாஸ்டர் படத்தில் இணைத்து நடித்து வருகின்றனர். படத்தின் ஷிமோகா படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைப் பெறவுள்ளது. தற்போது இதன் முதல் பாடல் வெளிவரவுள்ளது. அனிரூத் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதன் ஒருபகுதி trackஐ ஒரு தட்டில் கல்லுடன் இசைத்தவாறு வீடியோ வடிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பாடல் காதலர்தினமான இன்று மாலை 6மணிக்கு வெளிவரும் என்று அனிரூத் தெரிவித்துள்ளார். அனிரூத் பாடல் என்றாலே மிகவும் துள்ளலாகத்தான் இருக்கும் அதேபோல் இந்தப்பாடலும் அவ்வாறே அமையும் என்று விஜய் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக விஜய் படம் வெளிவருவதற்க்கு முன்னதாக பாடல்கள் வரும்போது விஜய் குரலால் பாடியபாடல்கள் முதலில் வரும் அதேபோல் “குட்டி கதை” பாடல் அவர்பாடியிருப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அனிரூத் மற்றும் விஜய் இணைந்து தற்போது ஒரு போட்டோ ஒன்று வெளிவந்தது அது அந்த பாடலுக்கான வேலைக்காக கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது.

வைரலாக பரவும் அனிருத் போடும் மாஸ்டர் தாளம்

You may also like...

Leave a Reply