அதே புடவையில் தேசியவிருது வாங்கிய கீர்த்தி சுரேஷ்
keerthi suresh national award for Mahanati movie
தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், ரஜினி முருகன், ரோமியோ, சர்க்கார் போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார், மேலும் இவருக்கு ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்றே கூறலாம் அந்த அளவுக்கு தனது நடிப்பு திறமை மற்றும் அழகும் பெற்றவர்.
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில்(மகாநதி) கீர்த்தி சுரேஷ் கடந்த 2018ம் ஆண்டு நடித்தார், மேலும் இதில் அவர் தனது அபரிவிதமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தினர், இதன் மூலம் தான் ஒரு சிறந்த நடிகை என்ற பெயரை மக்கள் மத்தியில் பெற்றார். இந்த படம் தமிழிலும் நடிகையர் திலகம் என்று மொழி பெயர்ப்பு செய்து வெளிவந்து தமிழ் மக்கள் மனதிலும் நீங்க இடம் பெற்றார்.
தற்போது கீர்த்திசுரேஷ் மகாநதி படத்திற்காக தேசிய விருது பெற்றார். டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நடந்த இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இந்த விருதுகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
படத்தில் நடித்த தோற்றத்தை போல் அதே சேலையில் அழகாக மேடையில் வந்து விருதை பெற்றுச்சென்றார்.