தளபதி படத்திற்கு போட்டியாக கார்த்தியின் கைதி திரைப்படம்- தீபாவளிக்கு ரிலீஸ்….!!!!

கார்த்தி நடிக்கும் கைதி படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற வெற்றி படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தான் கார்த்தியின் கைதி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பரில் துவங்கியது. இப்படத்தின் டீஸர் தற்போது இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடையே தற்போது கைதி திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப் போவதாக தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.

தளபதி படத்திற்கு போட்டியாக கார்த்தியின் கைதி திரைப்படம்-  தீபாவளிக்கு ரிலீஸ்....!!!!

ஏற்கனேவே, தீபாவளிக்கு தளபதியின் பிகில் படம் வெளியிடப்படும் என்கின்ற நிலையில் தற்போது கார்த்தியின் கைதி ரிலீஸ் குறித்து அறிவிக்கப்பட்டது மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து நரேன்,யோகிபாபு, ரமணா,தீனா, வாட்சன், பொன்வண்ணன் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை சாம். சத்திய சூரியனின் ஒளிப்பதிவு இப்படத்திற்கு மேலும் பக்க பலமாக இருக்கும் .

தளபதி படத்திற்கு போட்டியாக கார்த்தியின் கைதி திரைப்படம்-  தீபாவளிக்கு ரிலீஸ்....!!!!
தீபாளிவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்கள்

வரும் தீபாவளி நம் அனைவருக்கும் சரவெடியாக அமையதான் போகிறது என்பதில் சந்தேகமே இல்லை………..!!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *