விஜய் சேதுபதி படத்திலிருந்து வெளியேறிய சமந்தா..! ஏன் தெரியுமா?
விஜய் சேதுபதி படத்திலிருந்து வெளியேறிய சமந்தா.! ஏன் தெரியுமா?
விஜய் சேதுபதி நடித்து வரும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நயன் மற்றும் சமந்தா நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர். தற்போது, இப்படத்தில் இருந்து திடீரென சமந்தா விலகுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கயத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்” . இப்படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்க இருந்தனர். இதனால் நயன்தாராவுக்கும் சமந்தாவுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அப்படியிருக்கையில், திடீரென, சமந்தா இந்த படத்தில் முக்கிய காதாபாத்திரம் தனக்கு இல்லாததால் தான் இப்படத்திலிருந்து விலகுவதாக கூறியுள்ளார். இதனால், அந்த காதாபாத்திரத்தில் நடிக்க ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்ய போவததாக, படக்குழு தெரிவித்துள்ளது. இன்னும் உறுதியாக தெரியவில்லை.இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால், நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் தான் இந்த படத்தை இயக்குகிறார் என்பது தான்.