ஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் தொற்று-இந்தியர்களுக்கும் வைரஸ் தொற்று….

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலரும் மடிந்து வருகின்றன. இதுவரை சீனாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60,000 க்கும் மேல் கூறப்படுகிறது. இதில் 2000 பேர் உயிரிழந்து விட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. இதன் எண்ணிக்கை இன்னும் அதிகமகலாம் என கூறுகின்றனர்.

ஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா  வைரஸ் தொற்று-இந்தியர்களுக்கும் வைரஸ் தொற்று....

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுவதால் மிக விரைவில் அனைத்து நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்தியாவிலும் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா  வைரஸ் தொற்று-இந்தியர்களுக்கும் வைரஸ் தொற்று....

தற்போது, ஜப்பானில், யோககாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசுக்கப்பலில்,பயணம் செய்த 200 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த டைமண்ட் பிரின்சஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் சீனாவிற்கு சென்று யோககாமா துறைமுகத்திற்கு போன வாரம் வந்தடைந்தது. சீனாவில் இருந்து திருப்பி வந்ததால், அந்த கப்பலில் பயணம் செய்தவர்களை சோதித்து பார்த்ததில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதில் 6 பேர் இந்தியர்கள் என்பது வேதனைக்குரிய விஷயம் தான். அதில் ஒருத்தர் தமிழ்நாட்டில் மதுரையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வரமாக அந்த துறைமுகத்திலே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது கப்பல். வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் தனியாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனராம். கப்பலில் சுமார் 3000 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.


You may also like...

Leave a Reply