தர்பார் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

Darbar release in trouble : தர்பார் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து எஆர் முருகதாஸ் தயாரிப்பில் வருகிற பொங்கலுக்கு ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. ரஜினி ரசிகர்கள் இதனை கொண்டாடிக்கொண்டிருக்கிற வேளையில் தபோது தர்பார் படம் வெளியாவதில் சிறிது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தர்பார் படம் ரிலீஸ் பண்ண கூடாது என்று மலேசியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் ரஜினிகாந்த நடித்த 2.0 படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திடம் இருந்து, மலேசிய விநியோக உரிமையை 20 கோடி ரூபாய்க்கு பெற்றதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு கடனாக லைக்கா நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயை தங்களுக்கு லைக்கா நிறுவனம் வழங்க வேண்டி இருப்பதால், அந்த தொகையை வழங்காமல் தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

தர்பார் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

இந்த மனுவை விசாரித்த விடுமுறைகால நீதிமன்றம், ஜனவரி 2 ம் தேதிக்குள் பதிலளிக்க லைக்கா நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நாளை பதில்மனு தாக்கல் செய்வதாக கூறி லைக்கா நிறுவனம் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.


You may also like...

Leave a Reply