Enjoy Enjamy பாடலின் அர்த்தம் – Video song with lyrics

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் மகள்(Dhee) பாடிய அசத்தலான பாடல்… ஆஸ்திரேலியாவிலிருந்து சாட்ரே தமிழ்நாடு திரும்பிய தி(Dhee) கொடுத்த வைரல் Rap Song… பாடலாசிரியர் அறிவு.

இந்த பாடலுக்குள் ஒரு உண்மை கதை உள்ளது. பாடலாசிரியர் அறிவு தனது பாட்டியின் கதையை ஒரு அழகான பாடலாக நமக்கு சமர்பித்துள்ளார். சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் நம் நாட்டிலிருந்து சிலர் பஞ்சம் பிழைப்பதற்காக இங்கிருந்து இலங்கைக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துள்ளனர். இவர்களின் இந்த உழைப்பு இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பக்க பலமாக அமைந்தது. ஒருகட்டத்தில் இவர்களை இலங்கை அரசு அங்கிருந்து வெளியேற்றியது.

அங்கிருந்து வந்தவர்கள் தற்போதுவரை ஊட்டி, கொடைக்கானல போன்ற மலைப்பிரதேசங்களில் வேலை செய்து வருகின்றனர். இந்த கருவை மனதில் வைத்துக்கொண்டு பாடலை பார்த்தீர்களானால் அதில் வரும் காட்சிகள் இந்த கருவுடன் ஒத்துப்போகும். பாடலில் கூட அவர் தனது பாட்டியின் பெயரை சொல்லியிருப்பார் “வல்லியம்மா பேராண்டி”. இந்த சம்பவத்தை அழகான Rap Song ஆகா நமக்கு கொடுத்துள்ளார் Dhee(பாடகி) மற்றும் சந்தோஷ் நாராயணன்.

Enjoy Enjamy பாடலின் அர்த்தம் – Video song with lyrics

குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி

குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளக்கி
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி

அள்ளி மலர்க்கொடி அங்கதமே
ஓட்டரே ஓட்டரே சந்தனமே
முல்லை மலர்க்கொடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமே

சுருக்கு பையம்மா
வெத்தலை மட்டையம்மா
சொமந்த கையம்மா
மத்தளம் கோட்டுயம்மா

தாயம்மா தாயம்மா
என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி
சங்கதியை கூறேண்டி
கண்ணாடியே காணோடி
இந்தர்ரா பேராண்டி

அன்னைக்கிளி அன்னைக்கிளி
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி இந்த
மண்ணை கொடுத்தானே பூர்வகுடி

கம்மங்கரை காணியெல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்கெல்லாம்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஒப்பனை யாரு மயிலுக்கு

குக்கூ குக்கூ
பச்சையை பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குனே கூட்டுக்கு

பாடுபட்ட மக்கா
வரப்பு மேட்டுக்காரா
வேர்வத்தண்ணி சொக்கா
மினுக்கும் நாட்டுக்காரா

ஆக்காட்டி கருப்பட்டி
ஊதங்கொழு மண்ணுச்சட்டி
ஆத்தோரம் கூடுகட்டி
ஆரம்பிச்ச நாகரீகம்

ஜன் ஜனே ஜனக்கு
ஜனே மக்களே
உப்புக்கு சப்பு கொட்டி
முட்டைக்குள்ள சத்துக்கொட்டு
அடக்கி ரத்தங்கொட்டு
கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு

நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்
தோட்டம் சேழிச்சாலும்
என் தொண்டை நனையலேயே

என் கடலே கரையே
வனமே சனமே
நிலமே குளமே
இடமே தடமே

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

பாட்டன் பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினந்தா சுத்தி வந்தா
சேவ கூவுச்சு
அது போட்டு வச்ச எச்சம் தானே
காட மாறுச்சு
நம்ம நாடா மாறுச்சு
இந்த வீடா மாறுச்சு

என்ன கோரை என்ன கோரை
என் சீனி கரும்புக்கு என்ன கோரை
என்ன கோரை என்ன கோரை
என் செல்ல பேராண்டிக்கு என்ன கோரை

பந்தலுல பாவக்கா
பந்தலுல பாவக்கா
வேதகள்ளு விட்டுருக்கு
அது வேதகள்ளு விட்டுருக்கு
அப்பன் ஆத்தா விட்டதுங்க
அப்பன் ஆத்தா விட்டதுங்க

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

என் கடலே கரையே
வனமே சனமே
நிலமே குளமே
இடமே தடமே
குக்கூ குக்கூ


You may also like...

Leave a Reply