Covaxin செயல்பாடு எவ்வாறு உள்ளது?
Covaxin செயல்பாடு எவ்வாறு உள்ளது?
COVID-19 க்கு எதிரான முதல் தடுப்பூசி கோவாக்சின்(Covaxin) இதன் அறிவியல் பெயர் , கர்நாடகாவில் உள்ள பெலகாவி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 200 ஆரோக்கியமான தன்னார்வலர்கள் குழுவில் இந்த தடுப்பூசியை செலுத்தி சோதிக்கப்படும்.
Bharat Biotech International Ltd என்ற தனியார் நிறுவனம் தயாரித்த இந்த கொரோனா தடுப்பூசியை ஜீவன் ரேகா மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களால் இந்த சோதனை சுமார் 200பேர்களிடம் செலுத்தி ICMR என்றழைக்கப்படும் Indian Council of Medical Research கண்காணிப்பில் இந்த சோதனை நடத்தப்படும்.
தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளுக்காக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் ஜீவன் ரேகாவும் ஒன்றாகும், இதன் தொழில்நுட்ப பெயர் பிபிவி 152 கோவிட் தடுப்பூசி(BBV152 COVID vaccine).

இந்த கொடூர நோய்க்கான உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் தடுப்பூசியின் பரிசோதனையில் ஒரு பகுதியாக இருப்பதில் அங்கு பணிபுரியும் மருத்துவர்களும் செவிலியர்களும் மிகுந்த பெருமிதம் கொள்வதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் இந்த தடுப்பூசி ஆரோக்கியமான நபர்கள் மீதுதான் தற்போது செலுத்தப்படுவதாக தெரிவிக்கின்றனர். அதேபோல் ஒரு தடுப்பூசி சோதனை வழக்கமாக மூன்று மாதங்கள் எடுக்கும் போது, COVID-19 தடுப்பூசி அதைவிட விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்ற இந்த மருந்தின் முக்கியத்துவத்தை அறிந்து அவர்கள் இரவு பகல் பாராமல் தங்கள் முழு ஈடுபாட்டினை செலுத்தி அதற்கான தகவல்களை மிக விரைவில் அளிக்க வேலை செய்து வருகின்றனர். ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திற்குப் பிறகு இந்த மருந்து பொது பயன்பாட்டிற்கு பரிந்துரைக்கப்படலாம் என்று ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது. இதனால் இந்த சோதனை மிக விரைவில் அதேபோல் துல்லியமான தகவல்களும் அளிக்க அவர்கள் முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
சுமார் 150 முதல் 200 நபர்கள் வரை இந்த மருந்து செலுத்தி சோதனை செய்யப்பட்டு வருகிறது. மருந்து செலுத்திவிட்டு பின்னர் அவர்களின் மருத்துவம் சார்ந்த தரவுகளை சேகரித்துக்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். அந்த தரவுகளின் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று இந்த குழு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி மிகவும் சிறப்பாக செயல்படவேண்டும் என்பதே இந்தியா மற்றும் உலக மக்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த சோதனை ஓட்டத்தில் இவர்களின் கண்டுபிடிப்பு வெற்றியடைய வேண்டும் என்பது நம் அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.
Covaxin செயல்பாடு எவ்வாறு உள்ளது?
6 Responses
… [Trackback]
[…] Information to that Topic: cinibook.com/covid-19-response […]
… [Trackback]
[…] Read More on that Topic: cinibook.com/covid-19-response […]
… [Trackback]
[…] Information on that Topic: cinibook.com/covid-19-response […]
… [Trackback]
[…] Find More here to that Topic: cinibook.com/covid-19-response […]
… [Trackback]
[…] Find More on to that Topic: cinibook.com/covid-19-response […]
… [Trackback]
[…] Info to that Topic: cinibook.com/covid-19-response […]