144 தடை காலகட்டத்தில் எந்தந்த நிறுவனங்கள் இயங்கும்
அரசு 144 தடை உத்தரவை இன்று மாலை 6மணி முதல் அறிவித்த நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் மக்களின் சிரமங்களை உணர்ந்து மக்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அதையடுத்து தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து ரேஷன் அட்டைதாரகளுக்கு தல 1000 ரூபாய்யும் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகிய அத்யாவசிய பொருட்கள் வருகிற ஏப்ரல் மாதம் இலவசமாக தருவதாக தெரிவித்துள்ளார், இந்த 144தடைக்காலத்தில் எந்தந்த துறை இயங்கும்/இயங்காது என்பதை தெரிவித்துள்ளது அதனை கிழே விரிவாக கொடுத்துள்ளோம் தெரிந்துகொள்ளுங்கள்.

1) குளிரூட்டப்பட்ட ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
2) ஆடம்பர வசதிகள் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
3) திரையரங்குகள் மூடப்பட்டன. திரைப்படங்கள் இல்லாமலும் நம்மால் வாழ முடியும் என்பதை இது உணர்த்தியது.
4) ஆடம்பர மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டன.ஆடம்பரப் பொருட்கள் இல்லாமலும் நம்மால் வாழ முடியும் என்பது இதன் மூலம் கற்றுக் கொண்டோம்.
5) விலை உயர்ந்த நகை மற்றும் பொருட்கள் விற்கும் கடைகள் மூடப்பட்டன.இவை இல்லாமலும் நம்மால் வாழ முடியும் என்பதை கற்றுக் கொண்டோம்.
ஆனால் இன்று மக்கள் கூட்டம் எங்கே இருக்கிறது தெரியுமா?
6) மளிகை கடைகளிலும் காய்கறி கடைகளிலும்…காரணம் ஆடம்பரங்கள் இல்லாமல் வாழலாம் ஆனால் உணவு இல்லாமல் வாழவே முடியாது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தருணம்.
உணவை உற்பத்தி செய்யும் விவசாயி எவ்வளவு முக்கியமானவன் என்பதை இந்த “கரோனா வைரஸ்” நமக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்றுமே நன்றிக்கடன் செலுத்த வேண்டிய ஒரு ஆள் #விவசாயி தான். எத்தன ஜீ வந்தாலும் கஞ்சி விவசாயிதான் ராசா ஊத்தனும்.