கொரோனாவை தடுக்க மருந்து இதுதான்..! – கு.சிவராமன் சித்த மருத்துவர்

கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலை இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது அதிக அளவில் கொரோன பரவி வருகிறது. தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இளம் வயதை சேர்ந்தர்வர்களும் பதியுப்பு உள்ளாகி வருகின்றனர் என்பது தான் மிகுந்த வேதனைக்குரிய விஷயம். தற்போது தமிழ்நாட்டில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் பாதிப்பு எண்ணிக்கையில் பெரிதளவில் மாற்றம் இல்லை. அடுத்து மூன்றாவது அலை வரவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்று தகவல் கூறுவது தான் மிகவும் அதிரிச்சிக்குளான செய்தி.
எனவே, இனி வரும் காலங்களில், நாம் தான் நம்மை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருந்து கொள்ள வேண்டும். நம் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். நம் குழந்தைகளுக்கும் ஆரோக்யமான உணவு வகைகளை மட்டும் பெற்றோர்கள் கொடுக்க வேண்டும். நம்முடைய உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணம் உணவு வகைகளை எடுத்துக் கொள்வது நல்லது. டாக்டர் சிவராமன் அவர்கள் கூறிய விஷயங்களை கேட்டு பயன் பெறுங்கள். “வரும் முன் காப்பதே சிறந்தது” என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் இந்த சூழ்நிலையில் வீட்டில் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள். தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். வெளியில் செல்லும் பொது மாஸ்க் போட்டு கொண்டு செல்லுங்கள். ஆரோக்கியமாகவும், கொரோனா பற்றிய விழிப்புஉணர்வுடன் இருப்போம்…


You may also like...

Leave a Reply