விஜய் தேவர்கொண்டா படத்தின் வீடியோ பாடல் வெளியீடு.!!!ரசிகர்கள் கொண்டாட்டம்

தெலுங்கில் தற்போது ரொம்ப பிரபலான நடிகராக வலம் வருபவர் “விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி” அவர் நடித்த நோட்டா , கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் சூப்பர் ஹிட் படங்களில் மூலம் நிறைய ரசிகர்களை கவர்ந்தவர். இவர்க்கு தனி ஸ்டைல் இருக்கு. விஜய் தற்போது நடித்து வரும் படத்தில் இருந்து ஒரு வீடியோ பாடல் தற்போது வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

விஜய் தேவரகொண்டா, கிராந்தி மாதவ் இயக்கத்தில் “wrold famous lover” என்ற தெலுங்கில் படத்தில் தற்போது நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்தரின் தெரசா மற்றும் இசபேல் லெய்ட் ஆகியோர் விஜய்க்கு காதலர்களாக வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் விஜய் எல்லா படங்களில் நடித்தது போலவே ரொம்ப கோபமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் மற்றும் படத்தின் ஒரு சில பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அப்படத்தின் ஒரு வீடியோ பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அப்பாடலின் வீடியோ ரொம்ப அருமையாக உள்ளது.


You may also like...

Leave a Reply