விஜய்யின் பிகில் படத்தில் கல்லூரி மாணவியாக நயன்தாரா…!!!
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் பிகில் படத்தில் கல்லூரி மாணவியாக நயன்தாரா நடிக்கிறார் . கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னாள் வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . அதற்கு பின்பு , நீண்ட இடைவெளிக்கு பிறகு பிகில் படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார். அதுவும் பிஸியோதெரபி படிக்கும் கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார்.

பிகில் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். இளம் வயது விஜய், நடுத்தர வயது விஜய் என இரண்டு விதமான விஜய்-யை இதில் பார்க்கலாம். இளம் விஜய்க்கு ஜோடியாகிறார் நயன்தாரா…. படப்பிடிப்பு தொடங்கி உள்ள நிலையில், படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் எனக்கூறப்படுகிறது .