பிக்பாஸ் வீட்டில் வெளியேறும் மீரா – அவர்மீது தொடுக்கப்பட்ட புகார்

பிக் பாஸ் 3 :- கடந்த 9 நாட்களாக விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் அதிகம் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டுசெல்பவராகள் மதுமிதா, மீரா மிதுன், வனிதா மற்றும் அபிநயா தான். இவர்கள் எதோ ஒரு விசயத்தை பேச ஆரம்பித்தார்கள் என்றால் அது நிச்சயம் சண்டையில் தான் சென்று முடிகிறது, இறுதியில் அழுகாச்சியுடன் முடிக்கின்றனர். சிலசமயங்களில் சண்டை முடிந்த பிறகும் அதை மறுபடியும் பேசி வாதிட ஆரம்பிக்கின்றனர்.

இப்படியாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது மீராவிற்க்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர் கடந்த 2016ம் ஆண்டு பெமினாஸ் நடத்திய அழகி போட்டியில் மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றவர். அதன் பிறகு அவர் அழகிப்போட்டி நடத்தப்போவதாக சிலரிடம் பணம் பெற்று ஏமாற்றிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

அதேபோல் சென்னை தியாகராய நகரை சேர்ந்த ரஞ்சிதா, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மீராவின் மேல் புகார் கொடுத்துள்ளார் இதை விசாரித்த காவல்துறையினர் வருகிற 19ம் தேதி மீராவை நேரில் ஆஜராக சமன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக மீரா தரப்பில் தான் ஒரு தமிழ் பெண் என்பதால் என்மேல் அனைவரும் வீண் பழி சுமத்துகின்றனர், மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பங்குபெற்றுவருகின்ற காரணத்தால், நிகழ்ச்சி முடிந்த பிறகு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் வெளியேறும் மீரா - அவர்மீது தொடுக்கப்பட்ட புகார்
Meera Mithun – 2016 Miss South India Model

இந்த நிகழ்வால் மீரா தொடர்ந்து பிக் பாஸ் வீட்டினில் இடம் பெறுவாரா இல்லையேல் வெளியேறுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.


2 Responses

  1. September 25, 2020

    … [Trackback]

    […] Here you can find 29990 more Information on that Topic: cinibook.com/big-boss-meera-mithun […]

  2. September 27, 2020

    … [Trackback]

    […] Information on that Topic: cinibook.com/big-boss-meera-mithun […]

Leave a Reply