அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா??

அட்லீ இயக்கத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தின் பெயர் கூட தேர்வாகி விட்டது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்.....படத்தின் பெயர்  இதுதானா??

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் இயக்குனர் அட்லீ. முதல் படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த இயக்குனர் அட்லீ, தொடர்ந்து தளபதி விஜய் கூட்டணையில் மூன்று வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அவை தெறி, மெர்சல் மற்றும் தற்போது வெளியான பிகில் படம் இவை அனைத்துமே வெற்றி படங்களே. தமிழ் திரையுலகில் குறிகிய காலத்தில் அபரீத வளர்ச்சி அடைந்த இயக்குனர்- அட்லீ என்று சொன்னால் அது மிகையாகாது. பிரபல இயக்குனர்களின் வரிசையில் தற்போது இயக்குனர் அட்லீயும் இணைந்துள்ளார்.

அவர் தற்போது பிகில் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். அவர் அடுத்து இயக்க இருக்கும் பபடத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் ஒப்பந்தம் ஆகி உள்ளார். சங்கி என்று பெயரிடப்பட்ட இப்படத்தை பற்றிய மற்ற தகல்வல்களை இயக்குனர் அட்லீ நவம்பர் 2 இல் ஷாருக்கான் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார். இப்படம் ஹிந்தி மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலும் வெளிவரும் எனவும் தெரிவித்துள்ளார் அட்லீ.


You may also like...

Leave a Reply