ஆடை படம் எப்படி இருக்கு???

சில நாட்களாக பலரின் சர்ச்சைக்கு உட்பட்டு பேசப்பட்ட ஆடை படம் வெளிவந்துள்ளது. ஆடையே இல்லாமல் நடித்துள்ள அமலாபாலின் , ஆடை படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம் வாங்க….

கதைக்கரு:-

இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. வாழ்க்கை என்பதை எப்படி வேண்டுமென்றாலும் சுதந்திரமாக வாழலாம் என்று நினைக்கும் இன்றைய இளைஞர்களை பற்றிய கதை .

அமலா பால் வேலை செய்யும் தொலைக்காட்சி நிறுவனத்தை வேறு ஒரு கட்டிடத்திற்கு மாற்றம் செய்கின்றனர். அன்றைய நாள் தான் அமலா பாலின் பிறந்த நாள். எனவே, அமலா தன் டீம் உடன் தன்னுடைய பிறந்த நாளை பழைய கட்டத்தில் மாடியில் கொண்டாட முடிவு செய்கின்றனர். அதன்படி, தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நல்ல குடிபோதையில் இருந்த அமலா தன நண்பர்களுடன் சவால் விடுகிறார்… அதாவது, நாம் பிறக்கும் போது ஆடை இல்லாமல் தானே பிறந்தோம், எனவே என் பிறந்தநாளை நாம் ஆடை இல்லாமல் கொண்டாடுவது சரி என்று கூறி, அன்று இரவு முழுவதும் அந்த கட்டிடடத்தில் ஆடை இல்லாமல் இருக்கிறார்.

அவர், ஆடை இல்லாமல் தன் உடலை மறைக்க எவ்வளவு சிரமப்படுகிறார்??? இறுதியில் அந்த கட்டிடத்தில் இருந்து எப்படி வெளியே வருகிறார் தான் கதை.

திரைக்கதை :-

ஒரு பெண்ணினின் மார்பகத்தை மறைக்க வரி கட்ட வேண்டும் என்ற திருவாங்கூர் சமஸ்தானத்தை எதிர்த்து போராடிய ஒரு பெண் போராளியின் கார்ட்டூன் படம் மூலம் படம் ஆரம்பமாகிறது.

படத்தில் காமினி என்ற கதாபாத்திரத்தில் வரும் அமலா பால் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர். அவர் டீம்மில் ஒரு பெண் மற்றும் சில ஆண்கள் உள்ளனர். அமலா பால் மக்களிடம் நேரிடியாக பேட்டி எடுப்பவர். அப்பா இல்லாமல் அம்மா வளர்ப்பில் வளர்ந்தவர். அவர் எப்போதும் அம்மாவின் அறிவுரைகளை கேட்காமல் தான் இஷ்டத்திற்கு சுதந்திரமாக இருப்பவர். தன்னிடம் யாராவது இதைச் செய்ய முடியுமா? என்றுக் கேட்டால் போதும் உடனே அது எந்த ஒரு காரியமா இருந்தாலும் தைரியமாக செய்பவர் அமலா பால். பெட் கட்டுவதில் அடிமையானாவர்…….

திரைவிமர்சனம் :-

இயக்குனர் ரத்னகுமார் தமிழ் சினிமாவில் ஒரு புது முயற்சியை எடுத்துள்ளார் எனலாம். இப்படத்தின் மூலம் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் எப்படி சுதந்திரமாக வாழ்கின்றனர். அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பதை அழகா எடுத்துக் காட்டியுள்ளார். படத்தில் அமலா பால் நடிப்பை பாராட்டியே ஆகி வேண்டும். எந்த நடிகையும் நடிக்க யோசிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் ரொம்பவே தைரியமாக நடித்துள்ளார். படம் முழுவுதும் அவரின் நடிப்பு தான்….. விஜய் கார்த்திக் அவர்களின் ஒளிப்பதிவு உண்மையில் படத்தில் பெரிதளவில் பேசப்படும். ஏனென்றால், படத்தில் ஆடை இல்லாமல் அமலா பால் நடித்துள்ள காட்சிகள் படத்தில் எந்த ஆபாசமும் இல்லாமல் அழகா காட்டியுள்ளார் விஜய். புது விதமான முயற்சிக்கு இயக்குனருக்கும், நடிகைக்கும் பெரிய பாராட்டுகளை தெரிவிக்கலாம்.

படத்தில் கதை நல்லா இருக்கு. இருந்தாலும், ஒரு பெண் குடிக்கிற காட்சிகள்,பெட் செய்யதால் ஒரு பெண் என்ன வேண்டுமானாலும் செய்வாள் என்ற தவறான காணோட்டத்தில் படத்தை கொண்டு சென்றது கொஞ்சம் வருத்தம் அளிக்கிற விஷயம். படத்தில் வசனங்கள் எந்த சம்மந்தமும் இல்லாமல் வருவது ஒரு பெரிய மைனஸ்.. படத்தில் அமலா தவிர மற்ற கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாத நிலை.

படம் இரண்டாவது பகுதியில், கொஞ்சம் சலிப்பு …

மொத்தத்தில் படம் ஒரு புது முயற்சியை எடுத்துள்ள இயக்குனரை பாராட்டி பார்க்கலாம். அதுவும், அமலா பாலின் நடிப்பிற்காக….ஆடை ஆபாசம் படம் அல்ல.. அனைவரும் ஒரு முறை பார்க்கும் வகையில் உள்ளது..

Sneak Peek


You may also like...

Leave a Reply