கார்த்திகை திங்களில் சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்வது எதனால்?

கார்த்திகை மாதம் திங்கள்கிழமை அன்று, சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்குஅபிஷேகம் என்றால் என்ன? சங்குஅபிஷேகம் எதற்கு செய்கிறார்கள் என்று பார்ப்போம் ?

கார்த்திகை திங்களில் சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்வது எதனால்?

சங்கு என்பது செல்வத்தின் சின்னமாக கருதப்படுகிறது. வற்றாத பொருட்செல்வமும், இறைவனின் அருளை பெறுவதற்காகவும் சங்குஅபிஷேகம் இறைவனுக்கு செய்கிறார்கள். துறவிகளும் இதை மேற்கொள்கிறார்கள் எனலாம். சிலர் வீட்டிலும் சங்கு வைத்து பூஜை செய்வார்கள். பல சிறப்புக்கள் நிறைந்த சங்கினால் அபிஷேக பிரியர் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு மிக்கது. சங்கில் புனித நீர் நிரப்பி அதை கங்கை என்னும் புனித நீராக கருதி கங்கையை அணிந்தவருக்கு, அதாவது சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள். 108 சங்கினால் தான் அபிஷேகம் நடக்கும். சங்கில் புனித நீர் மட்டுமல்லமால், பால், பன்னிர் மற்றும் பஞ்சகாவ்யம் என எதை எடுத்துக்கொண்டாலும், அபிஷேகம் செய்யும் போது, கங்கை நீராகவே கருதுவார்கள்.

கார்த்திகை திங்களில் சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்வது எதனால்?
சரி, கார்த்திகை மாதங்களில் சோமவாரத்தில்( திங்கள் அன்று) சிவபெருமானுக்கு சங்குஅபிஷேகம் செய்வது எதற்காக என்றால்? கார்த்திகை மாதங்களில் சிவபெருமான் அக்னிப் பிழம்பாக இருப்பார். அவரை குளிர்விக்கவே, சங்காபிஷேகம் செய்யப்படுகிறதாம். கோவிகளில் கார்த்திகை மாதங்களில் திங்கள் அன்று சிவனுக்கு சங்குஅபிஷேகம் நடக்கும். 108 அல்லது 1008 சங்கினால் அபிஷேகம் செய்வார்கள். மேலும், சங்கு இயற்கையாக கிடைக்க கூடியது. சங்கு வெண்மை நிறம் உடையது. சுட்டாலும் வெண்மையாகவே இருக்கும் என்பதால், மனிதன் மனமும் எப்போதும் வெண்மையாகவே இருக்க வேண்டும் என்பதனை உணர்த்தவே, இவ்வாறு சங்கின்னால் கோவிகளில் அபிஷேகம் செய்கிரார்களாம். ஆன்மீகத்தில் செய்யும் பூஜை அனைத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு. நம் முன்னூர்கள் எதையும் வெறுமென செய்யவில்லை.

 

கார்த்திகை திங்களில் சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்வது எதனால்?
சிறப்புமிக்க சங்குபிஷேகத்தில் நாம் கலந்துக் கொள்வதனால், நமக்கு ஆயுள் விருத்தி உண்டாகும், தீராதா நோய் தீரும் மற்றும் தூர் சக்திகள் நம்மை விட்டு நீங்கும் என்பது நம்பிக்கை. எனவே, நாமும் இத்தகைய சிறப்புமிக்க சங்குஅபிஷேகத்தில் கலந்துக் கொண்டு பயன்பெறுவோம்.


You may also like...

Leave a Reply