தமிழ் திரையுலகில் புதிய பாதையில் “ஒத்த செருப்பு”- ஆஸ்கர் விருது கிடைக்குமா???

நடிகர் சூர்யாவின் காப்பான் படம் வெளியாகின்ற அதே தேதியில் தான் பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் படம் வெளியிடப்போவதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்..

பார்த்திபன் இயக்குனராக மட்டும் அல்லாமல், நடிகராகவும் தமிழ் திரையுலகில் புகழ் பெற்றவர். சிறந்த படங்களை தந்தவர். பல மாதங்களுக்கு பிறகு தற்போது தான் ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தை பார்த்திபன் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பஉள்ளாராம். ஆம். அவர் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு படம் ரொம்பவே வித்தியாசமான கதைக்களத்தில் பார்த்திபன் அமைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் புதிய பாதையில் "ஒத்த செருப்பு"- ஆஸ்கர் விருது  கிடைக்குமா???

படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல, படம் வித்தியாசமாக, தமிழ் திரையுலகில் இதுவரை யாரும் முயற்சிக்காத வகையில் கதைக்களத்தை அமைத்துள்ளார். அப்படி என்ன வித்தியாசம்??? என்று யோசிக்கிறாங்களா??? இப்படத்தில் ஒரே ஒரு காதாபாத்திரம் மட்டும் தான், அதுவும் ஒரே ஒரு லொகேஷன் தான். உலகில் இது போன்ற படங்கள் பன்னிரண்டு தான் உள்ளதாம். அதிலும்,இப்படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால்?? படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் நடிகர் அனைத்தும் பார்த்திபன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் யாரும் முயற்சிக்காத புதிய பாதையை தமிழ் திரையுலகிற்கு மட்டும் அல்லாமல், உலக அளவில் சாதனை படைக்க போகிறார் என்று சொன்னால் அது மிகையாகது. படத்தை இயக்குனர் பார்த்திபன் தான் அந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தான் சிறப்பு. ஒரு காதாபாத்திரம் என்பதால் மற்ற தொழில்நுட்பங்கள் ரொம்ப சிறப்ப அமையனும். பின்னணி இசை தான் படத்திற்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதால், ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி தான் படத்திற்கு ஒலி அமைப்பாளர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் புதிய பாதையில் "ஒத்த செருப்பு"- ஆஸ்கர் விருது  கிடைக்குமா???

ஆஸ்கர் விருது வாங்குவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளதால், பார்த்திபன் இப்படத்தை ஆஸ்கர் விருது வாங்க அனுப்ப உள்ளாராம். பார்ப்போம்…மக்கள் மனதில் இப்படம் இடம் பிடிக்குமா?? ஆஸ்கர் விருது வாங்குமா?? என்பது படம் வெளியானால் தெரியும்………!!!!!!!!


You may also like...

Leave a Reply